தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்
Congress: காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான தேசிய அளவிலான 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள 4வது பட்டியலில் 46 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 இடங்களில் ஏழு இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More – வீரப்பன் மகள் தேர்தலில் போட்டி! எந்த கட்சியில் தெரியுமா?
அதன்படி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரி – கே. கோபிநாத், கரூர் – ஜோதிமணி, கடலூர் – எம்.கே. விஷ்ணு பிரசாத், சிவகங்கை – கார்த்தி சிதம்பரம், விருதுநகர் – மாணிக்கம் தாகூர், கன்னியாக்குமரி – விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. 7 வேட்பாளர்களில் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு மீண்டும் காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Read More – பாஜக வென்றால் இந்த நிலை ஏற்படும்! மு.க. ஸ்டாலின் பேச்சு
திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் சசிகாந்த் செந்தில் முக்கியமான வேட்பாளாராக பார்க்கப்படுகிறார். இவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மேலும், காங்கிரஸ் கட்சியின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள 7 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு! pic.twitter.com/OIhpsi3oaq
— FX16 News (@fx16news) March 24, 2024