திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து பேச வேண்டாம்- ஸ்டாலின் அறிக்கை
- திமுக -காங்கிரஸ் கூட்டணி இடையே சற்று விரிசல் அதிகமாகி வருகிறது.
- கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கணிசமான வெற்றியை பெற்றது.ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் அறிக்கையில் , தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.இதன் விளைவாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் காங்கிரஸின் முக்கிய கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை.
இதன் ஒரு பகுதியாக திமுகவின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு கூறுகையில், கூட்டணியில் பிரச்னை இருந்தால் ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி நேரில் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறினார்.இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி திடீர் அழைப்பு விடுத்தார்.இதனால் டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்தார் அழகிரி. இதன் பின்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள்.இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை.திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு இல்லை என்று தெரிவித்தார்.
“கூட்டணி குறித்த கருத்துகளை பொதுவெளியில் தெரிவிப்பதை தவிர்த்திடுக”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/pYD35J6ka9#DMK #mkstalin pic.twitter.com/veG2TaRdpo
— DMK (@arivalayam) January 18, 2020
இதனையடுத்து மீண்டும் திமுகவின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு கூறுகையில்,திமுக – காங்கிரஸ் கூட்டணி சரியாகி விட்டதா? என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். .மு.க.ஸ்டாலினை விமர்சித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையால் திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர் என்று தெரிவித்தார். இதனால் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.இதன் பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், கூட்டணி குறித்த கருத்துகளை இருகட்சியினரும் பொதுவெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.