சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடரும் – கே.எஸ்.அழகிரி

- திமுக -காங்கிரஸ் கூட்டணி இடையே சற்று விரிசல் அதிகமாகி வருகிறது.
- சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கணிசமான வெற்றியை பெற்றது.ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் அறிக்கையில் , தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.இதன் விளைவாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் காங்கிரஸின் முக்கிய கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை.
இதன் பின்னர் ஏற்பட்ட கருத்து மோதல்களால் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார்.இதனையடுத்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், திமுக – காங்கிரஸ் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி பேசியுள்ளோம். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடரும். திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. திமுக கூட்டணி கட்சிகளிடையே ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். கொள்கை ரீதியாகவே கூட்டணியில் சேர்ந்துள்ளோம். இந்த தேசத்தின் மனசாட்சி என்பது நாங்கள்தான் என்று தெரிவித்தார் .
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025