செய்தியாளர் சந்திப்பின் போது கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரசார் மோதல்..!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, காங்கிரசார் மத்தியில் மோதல்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார். அங்கு மாநில அளவிலான நிர்வாகிகள் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த நிர்வாகி பன்னீர்செல்வம், முனுசாமி என்பவரைப் பார்த்து மேடையிலிருந்து கீழே இறங்குமாறு சத்தமாக கூறியுள்ளார்.
ஆனால் முனுசாமி இறங்க மறுத்ததையடுத்து, பன்னீர்செல்வம் மற்றும் முனுசாமி இடையே மோதல்ஏற்பட்டது. இதனை தடுக்க மற்ற காங்கிரஸார் முற்பட்ட நிலையில், பன்னீர் செல்வத்தை சரமாரியாக தாக்கி அவரை வெளியே அனுப்பினர். மோதலுக்குப் பின் மீண்டும் பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடர்ந்து நடைபெற்றது. செய்தியாளர் சந்திப்பின்போது நிர்வாகிகள் இருக்கைகாக மோதல் சண்டையிட்டுக் கொண்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.