அவுட் ஆஃப் கவரேஜ்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார்- அமைச்சர் உதயகுமார்
அவுட் ஆஃப் கவரேஜ்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்களாக ரெட்டியார்பட்டி நாராயணன் அறிவிக்கப்பட்டார்.இந்தநிலையில் நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், நாங்குநேரியில் லைவில் இருக்கும் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு லைஃப் கிடைக்கும், அவுட் ஆஃப் கவரேஜ்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார்.
ஆட்சியில் இருந்தபோது குளங்களை தூர்வாராமல், இப்போது குளங்களை தூர்வாருவதுபோல் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். நாங்குநேரி மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் அவமதித்துவிட்டது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.