காங்கிரஸ் – பாஜக கட்சிகள் கர்நாடக நலன் சார்ந்து செயல்படுகின்றது …! மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
காங்கிரஸ் – பாஜக கட்சிகள் கர்நாடக நலன் சார்ந்து செயல்படுகின்றது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணைய அனுமதியை திரும்ப பெற வேண்டும் .காங்கிரஸ் – பாஜக கட்சிகள் கர்நாடக நலன் சார்ந்து செயல்படுகின்றது. இரு தேசிய கட்சிகளும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றது.காவிரி விவகாரத்தில் காங்கிரசும் – பாஜகவும் நினைத்தால் தீர்வு காண முடியும். ஆனால் இரு கட்சிகளும் அரசியல் செய்கின்றன.தமிழகத்தில் வெற்றிபெறும் எண்ணம் பாஜகவுக்குவுக்கு இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.