தமிழக காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் ! விஜய் வசந்திற்கு பதவி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.எனவே வருகின்ற ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,தமிழக சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தகுழுவில் அமெரிக்கை நாராயணன், மணி சங்கர் ஐயர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராக மறைந்த எம்.பி. வசந்தகுமார் மகன் விஜய்வசந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜய் வசந்த் உள்பட 57 பேர் தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தேர்தல் பரப்புரை குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025