தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு அறிவிப்பு!

tamilnadu congress

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளது.

இதில், குறிப்பாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிலும், இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கிய வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அதனால், மிகுந்த எதிர்பார்ப்பில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் உள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ்நாட்டிற்கான தேர்தல் குழு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பரபரக்கும் சண்டிகர் மேயர் தேர்தல்… ஆபரேஷன் தாமரை தோல்வி.! காங். ஆம் ஆத்மி கடும் அதிருப்தி.!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர். அதில், பா.சிதம்பரம், செல்வப் பெருந்தகை, கே.வி. தங்கபாலு , ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன் நாச்சியப்பன், செல்லகுமார் ஆகியோர் உள்ளனர்.

மேலும் தேர்தல் குழு பட்டியலில், குமரி அனந்தன், மணி சங்கர் ஐயர், தனுஷ்கோடி ஆதித்தன், கிருஷ்ணசுவாமி, கே.ஆர்.ராமசாமி, விஷ்ணு பிரசாத், ஜே.எம்.ஆரூண், நாசே ராமச்சந்திரன், சிடி மெய்யப்பன், மயூரா ஜெயக்குமார், மோகன் குமார மங்கலம், ஆர்ம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ உட்பட 35 பேர் காங்கிரஸ் தேர்வு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu