கமல்ஹாசனையும் காங்கிரஸையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.! ஈவிகேஎஸ்.இளங்கோவன் கருத்து.!
கமலின் தந்தை காங்கிரஸ்காரர். ஆகவே, காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. என ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டியளித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனுடம் ஆலோசனை நடத்தி ஆதரவு கோரினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கமல்ஹாசனை சந்தித்து திமுக கூட்டணியில் சேர வேண்டும் என அவரிடம் சொன்னேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர் தந்தை காங்கிரஸ்காரர். ஆகவே, காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது .
அவர் என்னை வரவேற்ற விதம் நிச்சயம் எங்களுக்கு ஆதரவு தருவார் என்றே நினைக்கிறன். நிர்வாகிகளிடம் பேசி கலந்து ஆலோசித்து கமல்ஹாசன் முடிவெடுப்பதாக கூறியுள்ளார். கமல்ஹாசன் மதசார்பின்மை கொள்கை உடையவர். ஜாதி வித்தியாசம் அவருக்கு கிடையாது. கடந்த தேர்தலில் தனியாக நின்று 11 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். இது அவர் மக்களிடையே பெற்ற செல்வாக்கை காட்டுகிறது. என கூறினார். மேலும் அதிமுக 4 ஆக உடைந்துள்ளது. அவர்கள் நால்வரும் சேர்ந்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். எனவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.