சாகித்ய அகாடமி விருது வென்றவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய படைப்பாளிகளைக் கவுரவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல் போன்ற பலவகையான படைப்புகளுக்கு விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில், 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயா்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
அதில், உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயா்த்தமைக்காக டி.இ.எஸ்.ராகவனுக்கும் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. அதேபோன்று, ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவலை தமிழில் மொழிபெயா்த்ததற்காக பேராசிரியா் கா.செல்லப்பனுக்கு இவ்விருது கிடைத்துள்ளது. சாகித்ய அகாடமி விருது வென்றவர்களுக்கு முதல்வர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், சாகித்ய அகாடமி விருது வென்றவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் பரப்பும் வகையில், உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழி பெயர்த்தமைக்காக டி.இ.எஸ். ராகவனுக்கும், ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ என்கிற வங்காள மொழி நாவலை தமிழில் மொழி பெயர்த்தமைக்காக முனைவர் கே.செல்லப்பன் அவர்களுக்கும்,
இவர்களை தொடர்ந்து, கவிஞர் சல்மா அவர்கள் எழுதிய இரண்டாம் ஜாமங்களின் கதை என்கிற தமிழ் நாவலை மராத்திய மொழியில் மொழி பெயர்த்தசோனாலி நாவங்குள் அவர்களுக்கும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர்கள் மூவருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…