தமிழகத்தை அறிவுசார் தமிழகமாக மாற்றிவரும் ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் – கனிமொழி!

தமிழகத்தை அறிவுசார் தமிழகமாக மாற்றிவரும் ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் என கனிமொழி ட்வீட்டர் பதிவு.
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இந்தியா முழுவதிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் நல்வழிப்படுத்தவும் அவர்களை உயர் நிலைக்கு கொண்டுவரவும் அயராது உழைக்கும் ஆசிரியர்களுக்கு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், கல்வியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கியதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மென்மேலும் தமிழகத்தை அறிவுசார் சமூகமாக மாற்றி வரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை எனக் கூறியுள்ளார்.