ஒலிம்பிக் ஹாக்கியில் வெற்றி பெற்ற தமிழக காவலருக்கு பேனர் வைத்து வாழ்த்து!
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற தமிழக காவலர் நாகநாதனுக்கு தமிழகத்தில் பல காவல் நிலையங்கள் முன்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவில் நடைபெற்று வரக்கூடிய ஒலிம்பிக் போட்டியில் இன்று ஆடவர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணியில் விளையாடுவதற்காக தமிழகத்தை சேர்ந்த தடகள வீரராகிய காவலர் நாகநாதனும் சென்றிருந்தார்.
நாகநாதன் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் ஆவார். ராமநாதபுரம் கமுதியில் சிங்கம்புலியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை பாண்டி தாய் பஞ்சவர்ணம் ஆவார். காவலராக பணியாற்றி கொண்டே பல தடகள போட்டிகளில்சாதித்துள்ளார் நாகநாதன். தற்பொழுதும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டு நாகநாதன் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து காவலர் நாகநாதனை பாராட்டி, தமிழகத்தில் உள்ள பல காவல்நிலையங்கள் முன்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.