புயலையும் மழையையும் பொருட்படுத்தாது துரிதமாக செயலாற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுகள்-முதல்வர் பழனிச்சாமி.!
புயலையும் மழையையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி துரிதமாக செயலாற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுகள் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 250 கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது . இந்த நிலையில் தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது என்றும், அடுத்த 6 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .மேலும் இந்த நிவர் புயலால் பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்தும் , மரங்கள் முறிந்தும் காணப்படுகிறது .அதனை பல பணியாளர்கள் முன் இறங்கி துரிதமாக செயல்பட்டு சீர் செய்துவருகின்றனர் . அவர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, வேளச்சேரி-தாம்பரம் சாலையில் நிவர் புயலால் விழுந்த மின்கம்பங்களை உடனடியாக மின் பணியாளர்களா சீர் செய்து வருகின்றனர்.இந்த கடினமான சூழலிலும் ,புயலையும் மழையையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி துரிதமாக செயலாற்றி வரும் பணியாளர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
வேளச்சேரி – தாம்பரம் சாலையில் #நிவர்புயலால் விழுந்த மின்கம்பங்களை உடனடியாக மின்பணியாளர்கள் சீர் செய்து வருகின்றனர்.
இந்த கடினமான சூழலிலும், புயலையும் மழையையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி துரிதமாக செயலாற்றி வரும் பணியாளர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்! pic.twitter.com/6IPu3jQ5w1
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 25, 2020