இந்திய அளவில் சி.ஏ தேர்வில் முதலிடம் பெற்ற சேலம் மாணவருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Published by
Rebekal

800 க்கு 553 மதிப்பெண்கள் பெற்று சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ள சேலம் மாணவர் இசக்கி ராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வரக்கூடியவர் தான் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன முனியப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம். இவரது மகனமகன் இசக்கி ராஜா சாட்டர்ட் ஆக்கவுண்டன்ட் இன்ஸ்டிடியூட்டில் படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் இவர் எழுதிய தேர்வு குறித்த மதிப்பெண் தற்பொழுது வெளியாகியுள்ள நிலையில், 800 க்கு 553 என மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் சி.ஏ தேர்வில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு  பெற்றோர்கள் இணைப்புகள் ஊட்டி பாராட்டு தெரிவித்து வந்தாலும் ,தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள மாணவர் இசக்கி ராஜாவுக்கு உறவினர்களும் நண்பர்களும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இசக்கி ராஜா கூறுகையில், தான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது சி.ஏ தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற வேண்டும் என தனது பெற்றோர்கள் ஊக்கமளித்து வந்ததனர். அதனை தன் கருத்தில் கொண்டு கடினமாக உழைத்து நம்பிக்கையுடன் தேர்வு எழுதினேன், ஆனால் முதலிடம் பிடிப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை, இருப்பினும் முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி. ஊக்கமளித்த பெற்றோர் மற்றும் வழிநடத்திய ஆடிட்டர் களுக்கு தனது மனமார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சேலத்துக்கு தனது மதிப்பெண் மூலம் பெருமை சேர்த்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

SA vs IND : இரண்டு சதம் …தொடரை கைப்பற்றிய இந்திய அணி! சஞ்சு, திலக் அதிரடியில் துவம்சமான தென்னாப்பிரிக்கா!

SA vs IND : இரண்டு சதம் …தொடரை கைப்பற்றிய இந்திய அணி! சஞ்சு, திலக் அதிரடியில் துவம்சமான தென்னாப்பிரிக்கா!

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…

3 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

6 hours ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

7 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

8 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

9 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

10 hours ago