இந்திய அளவில் சி.ஏ தேர்வில் முதலிடம் பெற்ற சேலம் மாணவருக்கு குவியும் பாராட்டுக்கள்!
800 க்கு 553 மதிப்பெண்கள் பெற்று சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ள சேலம் மாணவர் இசக்கி ராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வரக்கூடியவர் தான் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன முனியப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம். இவரது மகனமகன் இசக்கி ராஜா சாட்டர்ட் ஆக்கவுண்டன்ட் இன்ஸ்டிடியூட்டில் படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் இவர் எழுதிய தேர்வு குறித்த மதிப்பெண் தற்பொழுது வெளியாகியுள்ள நிலையில், 800 க்கு 553 என மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் சி.ஏ தேர்வில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு பெற்றோர்கள் இணைப்புகள் ஊட்டி பாராட்டு தெரிவித்து வந்தாலும் ,தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள மாணவர் இசக்கி ராஜாவுக்கு உறவினர்களும் நண்பர்களும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இசக்கி ராஜா கூறுகையில், தான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது சி.ஏ தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற வேண்டும் என தனது பெற்றோர்கள் ஊக்கமளித்து வந்ததனர். அதனை தன் கருத்தில் கொண்டு கடினமாக உழைத்து நம்பிக்கையுடன் தேர்வு எழுதினேன், ஆனால் முதலிடம் பிடிப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை, இருப்பினும் முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி. ஊக்கமளித்த பெற்றோர் மற்றும் வழிநடத்திய ஆடிட்டர் களுக்கு தனது மனமார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சேலத்துக்கு தனது மதிப்பெண் மூலம் பெருமை சேர்த்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார்.