சென்னையை வாழவைக்கும் மக்களுக்கு வாழ்த்து – எம்.பி கனிமொழி..!

சென்னையை வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைத்து சென்னை வாசிகளுக்கும் 382-வது சென்னை தின வாழ்த்துகள் என எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை கி.பி., 1639ம் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதை நினைவூட்டும் வகையில் சென்னை தினம் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு சென்னை மாநகராட்சியில் சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது.
இந்த சென்னை தினத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகை உள்ளிட்ட மாநகராட்சியின் பல கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் சென்னைக்கு 382 வயது ஆகிறது.
சென்னை தமிழகத்தின் தலைநகரமாக மட்டுமல்லாமல் கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் திகழ்கிறது. சென்னையை வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைத்து சென்னை வாசிகளுக்கும் 382-வது சென்னை தின வாழ்த்துகள். (1/2) pic.twitter.com/FqjhLMsYh5
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 22, 2021
இந்நிலையில், எம்.பி கனிமொழி தனது ட்விட்டரில், சென்னை தமிழகத்தின் தலைநகரமாக மட்டுமல்லாமல் கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் திகழ்கிறது. சென்னையை வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைத்து சென்னை வாசிகளுக்கும் 382-வது சென்னை தின வாழ்த்துகள். சென்னை வரலாறு குறித்தும் கலாச்சார சிறப்பு குறித்தும் அழுத்தமாக பதிவு செய்த திரு.சு. முத்தையா அவர்கள் தான் முதன்முதலில் சென்னை தின கொண்டாட்டத்தை முன்னெடுக்கச் செய்தவர் என்பதை இத்தருணத்தில் நினைவு கூர விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025