தன்னுயிரை பணையம் வைத்து பல இன்னுயிர்களை காப்பாற்றும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள்…அமைச்சர் உதயநிதிஸ்டாலின் ட்வீட்.!!

Udhaystalin

மருத்துவமனையில் மருத்துவர்கள் இருப்பது எவ்வளவு முக்கியத்துவமா அதே அளவிற்கு செவிலியர்கள் இருப்பதும் முக்கியமான ஒன்று. தங்களுடைய உயிர்களை பணையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள் என்று கூறலாம்.

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் எல்லாம் காலை, மாலை, இரவு என நேரம் காலம் பார்க்காமல் தன்னுயிரை பணையம் வைத்து பல இன்னுயிர்களை காப்பாற்றினர். இந்நிலையில், இன்று மே 12-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக செவிலியர்கள் தினம் (InternationalNursesDay) கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில் கூறியதாவது ” மருத்துவத்துறையில் தன்னுயிரை பணயம் வைத்து பல இன்னுயிர்களை காப்பாற்றி வரும் செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDayவாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களைத் தேடி மருத்துவம் போன்ற நம் திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக திகழும் செவிலியர்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்