‘முதல்வருக்கு பாராட்டுக்கள்’ – இந்த மசோதாவையும் ஆளுநர் கிடப்பில் போடுவார்…! – திருமாவளவன்
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கான சட்டமசோதா இன்று பேரவையில் நிறைவேறியிருப்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும் என திருமாவளவன் ட்வீட்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வரக்கூடிய சூழ்நிலையில், இதனை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
துணைவேந்தர்களை
மாநில அரசே நியமிப்பதற்கான சட்டமசோதா இன்று பேரவையில் நிறைவேறியிருப்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும். ஆளுநரின் தலையீட்டைத் தடுக்கும் இம்மசோதாவையும் ஆளுநர் கிடப்பில் போடுவார் என்றாலும் மாநில உரிமைக்கான போர்க்குரலாக இது பதிவாகட்டும். முதல்வருக்கு பாராட்டுகள்.@mkstalin pic.twitter.com/K1ucX1gxsd— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 25, 2022