100 தமிழக மாணவர்களை சொந்த செலவில் தாயகம் அனுப்பி வைத்த சோனு சூட்டுக்கு பாராட்டுக்கள் – ராமதாஸ்!
தாயகம் திரும்ப முடியாமல் தவித்த 100 தமிழக மாணவர்களுக்கு உதவிய சோனு சூட்டுக்கு ராமதாஸ் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படித்து வந்த தமிழக மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கொரோனா ஊரடங்கால், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் விமானப் போக்குவரத்து இன்றி தவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பிரபல வில்லன் கதாபாத்திரத்தின் நடிகர் சோனு சூட் இந்த மாணவர்களுக்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்து அவர்களை தாயகம் திரும்ப உதவி செய்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் சொந்த ஊர் திரும்ப வழியில்லாமல் மும்பையில் தவித்த தமிழகத்தை சேர்ந்த 100 பேரை தமது சொந்த செலவில் விமானம் அமர்த்தி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்த இந்தி திரைப்பட நடிகர் சோனு சூட் அவர்களால் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோல பல உதவிகளை செய்து அனைவரது நன்மதிப்பையும் பெற எனது மனமார்ந்த பாராட்டுகள் என கூறியுள்ளார்.