நமது முதல்வருக்கு நல்வாழ்த்துக்கள்! சென்று வருக! வென்று வருக! – பீட்டர் அல்போன்ஸ்
தலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.
முதல்வர் துபாய் பயணம்
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார். துபாயில் நடைபெறும் தொழில் கண்காட்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்திக்கின்றார்.
முதலமைச்சருடன்,எம்எல்ஏ உதயநிதி உள்ளிட்டோரும் துபாய்க்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த பீட்டர் அல்போன்ஸ்
இதுகுறித்து சிறுபான்மை நலத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,’உலக பொருளாதாரத்தின் வரைபடத்தில் உன்னதமான இடத்தினை தமிழகத்திற்கு பெற்றுத்தர முதலீடுகளையும்-முதலீட்டாளர்களையும் தேடி வளைகுடா நாடுகளுக்கு முதலமைச்சராக தனது முதல் அரசு முறை அயலக பயணத்தை மேற்கொள்ள இருக்கும் நமது முதல்வருக்கு நல்வாழ்த்துக்கள்! சென்று வருக! வென்று வருக!’ என பதிவிட்டுள்ளார்.
உலக பொருளாதாரத்தின் வரைபடத்தில் உன்னதமான இடத்தினை தமிழகத்திற்கு பெற்றுத்தர முதலீடுகளையும்-முதலீட்டாளர்களையும்
தேடி வளைகுடா நாடுகளுக்கு முதலமைச்சராக தனது முதல் அரசு முறை அயலக பயணத்தை மேற்கொள்ள இருக்கும் நமது முதல்வருக்கு நல்வாழ்த்துக்கள்!
சென்று வருக! வென்று வருக! @CMOTamilnadu pic.twitter.com/BeZSAdvxsm— S.Peter Alphonse (@PeterAlphonse7) March 23, 2022