என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள் – மு.க.ஸ்டாலின்

என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
ஆண்டில் உள்ள ஒவ்வொரு நாட்களும் ஏதாவது ஒரு சிறப்பு தன்மையை பெற்றிருக்கும்.அந்த வகையில் இன்றைய தினம் உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாப்படுகிறது.அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் தாயிடம் ஆசி பெற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், உயிரின் கரு,உணர்வின் திரு, வாழ்வின் உரு, வளர்ச்சியின் எரு, எல்லாம் சேர்ந்தவள் அன்னை. இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது. என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள். உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது என்று பதிவிட்டுள்ளார்.
உயிரின் கரு!
உணர்வின் திரு!
வாழ்வின் உரு!
வளர்ச்சியின் எரு!
எல்லாம் சேர்ந்தவள் அன்னை!இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது!
என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!#mothersday pic.twitter.com/CpayZlHoU5
— M.K.Stalin (@mkstalin) May 10, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025