எனது தம்பி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் – முக அழகிரி
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அவரது சகோதரர் மு.க அழகிரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு அவரது சகோதரர் முக அழகிரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக உள்ள முக ஸ்டாலினை பார்த்து பெருமைகொள்கிறேன் என்றும் அண்ணன் என்ற முறையில் எனது தம்பிக்கு வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுளார்.
மேலும், திமுக தலைவர் முக ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி வழங்குவர் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக மாபெரும் வெற்றியை தொடர்ந்து, நாளை ஆளுநர் மாளிகையில் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.