தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக மு.க ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி, தனி பெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கவுள்ளார். திமுகவின் வெற்றிக்கு பலரும் நேரில் சென்றும், சமூகவலைத்தளம் மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலாலுக்கு சேலத்தில் இருந்தே அனுப்பியுள்ளார்.
தமிழக முதலமைச்சராக வரும் 7ம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். கொரோனா பரவ காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனி பெரும்பான்மையுடன் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக முக ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில், தமிழகத்தின முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம், அத்தகைய ஜனநாயகம் காப்போம் என கூறியுள்ளார்.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…