அமேரிக்கா அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸிற்கு டிடிவி தினகரன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலானது கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது . அதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் வரலாற்றிலையே 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் ஜோ பைடன் . மேலும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார் .
இருவருக்கும் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அமமுக பொது செயலாளரான டிடிவி தினகரன் துணை அதிபரான கமலா ஹாரிஸிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள வாழ்த்து செய்தியில் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திருமதி.கமலா ஹாரிஸ் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அவரது பூர்வீகமான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திபுரம் கிராமத்திற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…