தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்த்துக்கள் – மு.க.ஸ்டாலின்
மகளீர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளீர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம், வாழ்த்துக்கள். திமுக ஆட்சியில் மகளிர் மேம்பாட்டிற்கு அளிக்கப்படவிருக்கும் முக்கியத்துவத்தின் தொடக்கமே ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என்ற அறிவிப்பு!’ என பதிவிட்டுள்ளார்.
தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்; #WomensDay வாழ்த்துகள்.
திமுக ஆட்சியில் மகளிர் மேம்பாட்டிற்கு அளிக்கப்படவிருக்கும் முக்கியத்துவத்தின் தொடக்கமே ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என்ற அறிவிப்பு!
— M.K.Stalin (@mkstalin) March 8, 2021