காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு சசிகலா வாழ்த்து.
காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். பி.வி.சிந்து காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்த நிலையில், பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து சசிகலா ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘காமன்வெல்த் பேட்மிண்டன் மகளிர் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ள பிவி சிந்து அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய வீராங்கனை பிவி சிந்து பெற்ற வெற்றியின் மூலம் காமன்வெல்த் பதக்கப் பட்டியலில், இந்தியா 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் உள்ளிட்ட 56 பதக்கங்களை வென்று நான்காவது இடத்திற்கு முன்னேறியிருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது.
காமன்வெல்த் போட்டியில் வென்றுள்ள நம் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்கள் மென்மேலும் பல்வேறு சாதனைகள் புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…