இந்திய அணியில் இடம் பெற்றுள்ள நடராஜன் சாதனைகள் படைக்க வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
சேலத்தின் சின்னம்பட்டியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்று சிறப்பாக பந்து வீசினார் .குறிப்பாக இறுதி ஓவர்களில் நடராஜன் வீசும் யார்கர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் பலர் திணறினர்.நடராஜன் நடப்பு ஐ.பி.எல் சீசினில் 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகிய மூன்று வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை அண்மையில் பிசிசிஐ வெளியிட்டது. அதில் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளது.ஆகவே ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய டி-20 அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெற்றுள்ளார் . காயத்தால் விலகியுள்ள சக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்குப் பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், எளிய குடும்பத்தில் பிறந்து, பல முட்டுக்கட்டைகளை முறியடித்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 20/20 மட்டைப்பந்து போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த வீரத்தமிழன் தங்கராசு நடராஜன் சாதனைகள் படைக்க வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…