வீரத்தமிழன் நடராஜன் சாதனைகள் படைக்க வாழ்த்துகள் – ராமதாஸ்

Default Image

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள  நடராஜன் சாதனைகள் படைக்க வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

சேலத்தின் சின்னம்பட்டியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு  நடராஜன் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில்  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்று சிறப்பாக பந்து வீசினார் .குறிப்பாக இறுதி ஓவர்களில் நடராஜன் வீசும் யார்கர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் பலர் திணறினர்.நடராஜன் நடப்பு ஐ.பி.எல் சீசினில் 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகிய மூன்று வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை அண்மையில் பிசிசிஐ வெளியிட்டது. அதில் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளது.ஆகவே ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய டி-20 அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெற்றுள்ளார் . காயத்தால் விலகியுள்ள சக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்குப் பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், எளிய குடும்பத்தில் பிறந்து, பல முட்டுக்கட்டைகளை முறியடித்து  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான  20/20 மட்டைப்பந்து போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த வீரத்தமிழன் தங்கராசு நடராஜன் சாதனைகள் படைக்க வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்