இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயங்க வாழ்த்துகிறேன் – தொல் திருமாவளவன்

இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயங்க வாழ்த்துகிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனைத்தொடர்ந்து திரைபிரபலங்கள், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது விசிக தலைவர் தொல் திருமாவளவன், ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், இன்று பிறந்தநாள் காணும் திரு.ரஜினி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். நாயகன், திரைத்துறையில் இயக்குநருக்கு ஏற்ப இயங்க வேண்டும். அரசியலில் இயக்குநராகவே இயங்க வேண்டும் என்பதை திரு.ரஜினி நன்கு அறிவார். இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயங்க வாழ்த்துகிறேன் என்று ரஜினியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இன்று பிறந்தநாள் காணும் திரு.ரஜினி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.
நாயகன், திரைத்துறையில் இயக்குநருக்கு ஏற்ப இயங்க வேண்டும்; அரசியலில் இயக்குநராகவே இயங்க வேண்டும் என்பதை திரு.ரஜினி நன்கு அறிவார்.
இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயங்க வாழ்த்துகிறேன். #HBDRajiniKanth@rajinikanth pic.twitter.com/blVE7Xowmt
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 12, 2020