தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியது வரவேற்கத்தக்கது …! அமைச்சர் செல்லூர் ராஜூ
தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், கஜா புயல் தொடர்பான தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியது வரவேற்கத்தக்கது.அதேபோல் குறை உள்ளபோது அதனை சுட்டிக்காட்டுவதும் சிறந்த பணியை மேற்கொள்ளும்போது அதனை வாழ்த்துவதும் அரசிற்கு உற்சாகத்தை தரும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.