காங்கிரஸ் கட்சி அழிவது காங்கிரஸ் கட்சி காரர்களாளே என காங்., கட்சியின் தமிழக தலைவர் கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி சார்பில் 2 நாள் அரசியல் பயிலரங்கம் கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே உள்ள வரலாற்றுக் கூடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, காங்கிரஸ் கட்சியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சனம் செய்யும் சீமான், வைகோ போன்றவர்களுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்னைகளிலோ அல்லது கலவரங்களிலோ ஈடுபடுவதில்லை. ஆனால், உள்கட்சி கூட்டங்கள் என்று வரும்போது ஒருவரை ஒருவர் மண்டை உடைந்து ரத்தம் வரும் அளவுக்கு கடுமையாக மோதிக்கொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களால்தான் காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் உள்ளது என்றார்.அவரது இந்த பேச்சு அங்கிருந்த நிர்வாகிகள் மத்தியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த பேச்சு வைகோ, சீமான் போன்றொர்களுக்கு எதிராக கட்சியினரை திருப்பிவிடும் நோக்கில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வண்முறையை விரும்பாத காந்தியின் காங்கிரஸ் தற்போது தடம் மாறுகிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…