இலங்கை அரசியலில் நிகழும் குழப்பம்..! இந்திய, சீன அரசுகளின் தலையீடுகள்தான் முக்கிய காரணம் …!திருமாவளவன்
இலங்கை அரசியலில் நிகழும் குழப்பங்களுக்கு காரணம் இந்திய, சீன அரசுகளின் தலையீடுகள்தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றார்.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது.குறிப்பாக தமிழகத்தில் தான் அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசியல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இலங்கை அரசியலில் நிகழும் குழப்பங்களுக்கு காரணம் இந்திய, சீன அரசுகளின் தலையீடுகள்தான்.அதேபோல் ரணில்தான் பிரதமராக இருக்கிறார் என இலங்கை சபாநாயகர் கூறியது எந்த பின்னணி என தெரியவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.