மேடையில் கன்பியூஸ் ஆன விஜய்.! கவிஞரின் பெயரை மாற்றி கூறியதால் குழப்பம்.!
தவெக பொதுக்குழு கூட்டத்தில் "Men may come and Men may go, But I go on forever" என்ற கவிதையை William Blake எழுதியதாக கூறியது பேசுபொருளாகியுள்ளது.

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுக கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது.
குறிப்பாக, இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் கூறிய வார்த்தை ட்ரோல் கன்டென்டாக மாறி இருக்கிறது. அதாவது, பெரியார், காமராசர், அம்பேத்கர் தொடங்கி அஞ்சலை அம்மாள்வரை ஆங்கிலத்தில் அவர்களை பற்றி சரளமாகப் பிளந்துரைத்த தவெக தலைவர் விஜய், “Men may come and Men may go. But, I go on For Ever” என்கிற கவிதையுடன் தனது உரையை முடித்து, இக்கவிதையை வில்லியம் ப்ளேக் (William Blake) எழுதியதாகக் கூறியிருக்கிறார்.
மேலும், இந்த் ஆங்கிலக் கவிதைக்கு அடுத்து, “ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்” என்கிற திருக்குறளுடன் விஜய் தனது வீர உரையை முடித்தார். ஆனால், அந்த ஆங்கில கவிதை ஆல்ப்ரெட் லார்ட் டென்னிசன் (Alfred Lord Tennyson) என்கிற ஆங்கிலப் புலவரால் எழுதப்பட்டது. அவர் என்ன பண்ணுவாரு பாவம், எழுதிக் கொடுத்தவர் தப்பா கொடுத்துட்டாருப்பா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Men may come Men may go… But I go on forever
இந்த வரிகள் Alfred Tennyson தன்னுடைய The Brook எனும் பாடலில் எழுதியதாக தகவல்….
ஆனால் இதை விஜய் William Blake எழுதியதாக பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார்….#TVKVijay pic.twitter.com/SrSdQ0buAg
— Priya Gurunathan (@JournoPG) March 28, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025