மேற்கு வங்க மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மீளமுடியாத நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது – முதல்வர் வாழ்த்து!
மேற்கு வங்க மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மீளமுடியாத நம்பிக்கை உறுதிப்படுத்துகிறது என இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிப்பூர் தொகுதியில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த பவானிப்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவை சேர்ந்த பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் 84, 709 வாக்குகள் பெற்று மம்தா பானர்ஜி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிரியங்காவை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று இவர் வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், பவானிப்பூர் இடை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி மேற்கு வங்க மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மீள முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
Congratulations to @MamataOfficial on her resounding victory in the Bhabanipur by-election. The massive mandate reconfirms the unassailable confidence that the people of West Bengal have reposed on you.#MamataBanerjee
— M.K.Stalin (@mkstalin) October 3, 2021