மனோஜ் பாரதி மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் இபிஎஸ் வரை இரங்கல் செய்தி!

இயக்குநர் மனோஜ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி வரை தங்களது சமுக வலைத்தளம் வாயிலாக இரங்கல் செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

manoj bharathiraja rip

சென்னை : தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாகிய நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அண்மையில், அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று மாரடைப்பால் காலமானார் என்று கூறப்படுகிறது.

இன்னும் சில மணி நேரத்துக்குள் மனோஜ் உடல் சென்னை நீலாங்கரை வீட்டுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுச் செய்தி, திரையுலகை மட்டுமல்லாமல் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில், இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி வரை தங்களது சமுக வலைத்தளம் வாயிலாக இரங்கல் செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,”இளம் வயதில் நடிகர் மனோஜ் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், திரை உலக நண்பர்களுக்கும் எனது இரங்கல் மற்றும் ஆறுதல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி

எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,”இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மறைவுச் செய்தியறிந்து துயருற்றேன், இத்துயர்மிகு வேளையில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். மனோஜின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்த்திரையுலகக் கலைஞர் மனோஜ், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “இயக்குநர் பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்புமகனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்