எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம்

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார்.இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது.இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார். அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே தேசிய கொடியை அவமதித்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது தேசிய கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகரின் மன்னிப்பை ஏற்பதாக சென்னை காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இதனையடுத்து இன்று நடைபெற்ற விசாரணையில்,எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம் .விசாரணைக்கு தேவைப்படும்போது காவல்துறை முன் ஆஜராக நிபந்தனை விதித்துள்ளது நீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025