#BREAKING: மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் ..!

மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கோவையில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில், பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டம் காரணமாக மூன்று நாட்களுக்குப் பிறகு தனிப்படை போலீசார் கடந்த 14-ஆம் தேதி இரவு பெங்களூருவில் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து, கோவை அழைத்து வரப்பட்ட மீரா ஜாக்சனை கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி பின் சிறையிலடைத்தனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில், கோவையில் மாணவி தற்கொலை வழக்கில் கைதான மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஞாயிற்றுக்கிழமை தோறும் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியது.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இடைகால நிவாரணமாக ஒரு லட்சம் வழங்கும் அரசுக்கு போக்சோ நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025