கறுப்பர் கூட்டத்தின் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்.!
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் சுரேந்திரன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் இருவருக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த விவாகத்தில் கைது செய்யப்பட்ட ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகிய இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.