ஆளுங்கட்சியினரின் அடாவடி செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் அறிக்கை.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்கு பதிவின்போது, குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சி, அன்னை இந்திரா நகர் வாக்குச் சாவடியில் ஆளும் தி.மு.க.வினர், அமமுகவினர் மீது கண்மூடித்தனமான கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பி.முத்தையா, கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற (9வது வார்டு) உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பி.மகாலிங்கம் உள்ளிட்ட 11 கழக தொண்டர்கள் மற்றும் பெண்கள் மீதும் கொலை வெறித்தாக்குதல் நடத்திய ஆளுங்கட்சியினரின் அடாவடி செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையினரும் இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…