இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்து மதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைக்கோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தி திணிப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும், அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்ககோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல,மொழி திணிப்புக்கு தான் எதிரி, இந்தியை இங்கு திணிக்க நினைத்தால், வரலாறு திரும்பும் என எச்சரிக்கிறேன்.
இந்தி பேசினால் தான் முன்னேற்றம் என்றால் இந்தி மாநிலங்கள் ஏன் முன்னேறவில்லை என்ற அண்ணாவின் கருத்து இன்றும் பொருந்தும், எங்கள் இளைஞர்களின் முனேற்றத்திற்கான வழிப்பாதை ஆங்கிலம்தான் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமை கழக செயலாளர் துரை வைகோ மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…