கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க இசைக்கச்சேரி….!

கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் வண்ணம், தஞ்சாவூரில், கொரோனா சிகிச்சை மையத்தில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரி.
கொரோனா வைரஸின் பரவலானது கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கும் அதற்கேற்ற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையில் உள்ள நோயாளிகள், தனிமைப்படுத்தப்படும் போது மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூரில், பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, இசைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் பாடிய பாடலை கேட்டு கொரோனா நோயாளிகள் உற்சாகமடைந்தனர்.