சந்திரகிரகணத்தை காண்பதற்கு குவிந்த மக்கள்!
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வு தான் சந்திரகிரகணம் எனப்படுகிறது. இந்த சந்திர கிரகணம் சென்னையில் 1:31 மணிக்கு ஆரம்பமாகி அதிகாலை 4:30 மணியளவில் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த சந்திரகிரகணத்தை காண சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கில் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என கூறப்பட்டிருந்த நிலையில், பிர்லா கோளரங்கில் பொதுமக்கள் அனைவரும் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சந்திர கிரகணத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்தியாவில் அடுத்த முழுமையான சந்திர கிரகணம், 2021-ல் தான் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.