செந்தொண்டர் பேரணியுடன் இன்று சங்கரய்யாவின் இறுதி ஊர்வலம்.! அரசு மரியாதையுடன் தகனம்.!

COMRADE SANKARAIAH

சுந்தரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 102. இந்தியாவின் விடுதலைக்கும், இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்றிய அரசியல் தலைவர் சங்கரய்யாவின் மறைவுக்கு பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர்.

தோழர் சங்கரய்யாவின் மறைவு அறிந்தவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்னை தனியார் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். தமிழக அமைச்சர்களும் உடன் மரியாதை செலுத்தினர்.

தோழர் சங்கரய்யா மறைவு.! அரசியல் தலைவர்கள் இரங்கல்.!

அதன் பிறகு அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக சங்கரய்யா உடல் வைக்கப்பட்டது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றும், மூன்று முறை எம்.எல்.ஏவாகவும் தமிழகத்திற்கு அவர் ஆற்றிய தொண்டையும் போற்றும் வகையில் தோழர் சங்கரய்யாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் எனவும், அரசு மரியாதையுடன் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பானை வெளியிட்டு இருந்தார்.

அதன்படி இன்று (நவம்பர் 16) காலை 10 மணியளவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயனத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணியுடன் சங்கரய்யாவின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. அதன் பிறகு அங்கு சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்