#BREAKING: கணினி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு.. விசாரணைக்கு உத்தரவு..!
கடந்த 2019-ஆம் ஆண்டு 814 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளது எனவும் 3 தேர்வு மையங்களில் செல்போன் பயன்படுத்தியதாக தேர்வு எழுதியவர்கள் புகார் கொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 3 மையங்களில் முறைகேடுகள் நடந்தததாக தெரியவருவதால் அது குறித்து விசாரிக்க ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்தார்.
இந்நிலையில், 3 மையங்களில் மட்டுமல்லாமல் பல மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது என்று கூறி தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அனைத்து தேர்வு மையங்களிலும் முறைகேடு நடந்ததாக என விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் குழு நியமனம் செய்யப்பட்டது.
அனைத்து தேர்வு மையங்களிலும் விசாரித்து ஏப்ரல் 30-க்குள் அறிக்கை தாக்கல் தர ஆதிநாதன் குழு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.