எதிர்காலத்தில் கணினி பொறியாளர்கள் நிறையபேர் தேவைப்படுவார்கள்.! டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு.!
எதிர்காலத்தில் அதிக அளவில் சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவைபடுவார்கள். – சென்னையில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு.
நாட்டில் தற்போது சைபர் குற்றங்கள் என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. சாமானிய மக்கள் முதல் பெரிய இடத்தில் இருப்பவர்கள் வரையில் பலரும் இந்த சைபர் குற்ற வலையில் சிக்கி தங்கள் பணத்தை இழந்துள்ளனர். அதனை குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று அந்த சைபர் குற்றங்கள் குறித்தும், சைபர் பாதுகாப்பு குறித்தும், சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் திரளான மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். அதில் சிறப்பு விருந்தினராக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்றார்.
அந்த கருத்தரங்கில் டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், நமது நாட்டில் சைபர் குற்றங்கள் என்பது தற்போது அதிகமாகிவிட்டது. அதனை தடுக்க போதுமான சைபர் கணினி பொறியாளர்கள் நம்மிடம் இல்லை. எதிர்காலத்தில் அதிக அளவில் சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவைபடுவார்கள். அதனை நீங்கள் (மாணவர்கள்) தான் நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.