திருப்பூர் வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி…!

திருப்பூருக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி போடாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு கட்டாய தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக திருப்பூர் மாவட்டத்திற்கு வரக்கூடிய தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கொரோனா நெகட்டிவ் என சான்றிதழ் வந்த பின்பே வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போதும், கொரோனா மூன்றாம் அலையை பரவலை தடுக்கும் விதமாக ரயில் நிலையங்களில் வைத்தே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்களா என சோதனை செய்யப்பட்டு, செலுத்தாத பட்சத்தில் அங்கேயே அவர்களுக்கு கட்டாய தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025