இன்றை தினம் அறிவிப்பு வருமா..? இதுதான் அண்ணாவின் கனவா..? – அன்புமணி ராமதாஸ்

Published by
murugan

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்து தலைவருக்கு கூட சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க சட்டத்தில் அதிகாரம் உள்ளது.

பஞ்சாயத்து தலைவருக்கே உரிமை இருக்கும்போது முதல்வருக்கு  இல்லையா..? என கேள்வி எழுப்பினார்.  மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. சட்டங்களுக்கு எதிராகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், காவிரி நடுவர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல்பாடுகளில் கர்நாடக அரசு  ஈடுபட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடக காவிரி படுகையில் எதுவும் கட்ட முடியாது என தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கை! மக்களிடம் கருத்து கேட்கும் திமுக… பரிந்துரைகளை எப்படி அனுப்புவது?

தொடந்து பேசிய அவர், இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள், இன்றைக்காவது தமிழ்நாட்டில் படி படியாக  மதுவிலக்கை கொண்டு வருவோம், என்ற அறிவிப்பு வருமா..?  என்ற ஏக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மது குடிக்காமல் இருக்க முடியாத சூழலில் உள்ளனர். இதுதான் அண்ணாவின் கனவா..?  தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முதலமைச்சரும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம் யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி துவங்கினால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறினார்.

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

3 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

4 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

4 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

4 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

5 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

6 hours ago