இன்றை தினம் அறிவிப்பு வருமா..? இதுதான் அண்ணாவின் கனவா..? – அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்து தலைவருக்கு கூட சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க சட்டத்தில் அதிகாரம் உள்ளது.
பஞ்சாயத்து தலைவருக்கே உரிமை இருக்கும்போது முதல்வருக்கு இல்லையா..? என கேள்வி எழுப்பினார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. சட்டங்களுக்கு எதிராகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், காவிரி நடுவர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல்பாடுகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடக காவிரி படுகையில் எதுவும் கட்ட முடியாது என தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கை! மக்களிடம் கருத்து கேட்கும் திமுக… பரிந்துரைகளை எப்படி அனுப்புவது?
தொடந்து பேசிய அவர், இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள், இன்றைக்காவது தமிழ்நாட்டில் படி படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம், என்ற அறிவிப்பு வருமா..? என்ற ஏக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மது குடிக்காமல் இருக்க முடியாத சூழலில் உள்ளனர். இதுதான் அண்ணாவின் கனவா..? தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முதலமைச்சரும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம் யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி துவங்கினால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறினார்.