இன்றுடன் நிறைவு பெறுகிறது அத்திவரதர் வைபவம்!
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை அத்திவரதர் சயனகோலத்தில் காட்சியளித்தார். பின்னர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரை நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை காஞ்சிபுரத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்த பிறகே தரிசனம் நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.மேலும் நாளை அதிகாலை தரிசனம் நிறுத்தப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றிய பிறகு ஆகம விதிப்படி அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதரை வைக்க ஏற்பாடு தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இன்று உடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைவதால் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.