நிறைவுபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:பரிசுகளை அள்ளிய மாவீரன்
- மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது
- நேற்று நடைபெற்ற உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி
- இறுதியாக நிறைவடைந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி
- 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு
- பரிசுகளை வழங்கும் முதல்வர், துணைமுதல்வர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது:
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது.
நேற்று நடைபெற்ற உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:
மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்றது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1400காளைகள் சீறிப்பாய, 848மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். 7ஏஎஸ்பிக்கள், 15டிஎஸ்பிக்கள் உட்பட 1500போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இறுதியாக நிறைவடைந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி:
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் உட்பட 40பேர் காயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த 15பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.
15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு:
இந்நிலையில் போட்டியின் முடிவில் , அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.மேலும் இவருக்கு பல பரிசுகள் அறிவிக்கப்பட்டது . அவருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.அதேபோல் சிறந்த காளையாக பரம்பப்பட்டி செல்லியம்மன் கோயில் காளை தேர்வு செய்யப்பட்டு, கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.
பரிசுகளை வழங்கும் முதல்வர், துணைமுதல்வர்:
சென்னையில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் பழனிச்சாமி சார்பில் கார் பரிசாக வழங்கப்படும் என்றும் சிறந்த காளைக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் சார்பில் மற்றோரு காரும் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.